21 வயது இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடிய 20 வயது பெண்! அதன் பின் தாயின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா
6966Shares

ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன். இவருக்கு 20 வயதில் சிம்ரன் என்ற மகள் உள்ளார். சிம்ரனும்,அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்வதி அம்மா என்பவரின் மகளான 21 வயது புஷ்பலதாவும் உயிர் தோழிகளாக இருந்து வந்தனர்.

புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.சிம்ரன் கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

சிறுவயது முதலே தோழிகள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாகினர். அவர்களை காணாமல் தவித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் புஷ்பா, மாணவி சிம்ரனின் தாய் கத்தூனின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழிகளாக இருந்த தங்கள் நட்பு, காதலாக மாறியதாகவும் திருமணமானால் ஒருவரையொருவர் பிரிந்து கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அழகிய பெண்ணாக இருந்த புஷ்பா தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆண்களை போல மாற்றிக் கொண்டதோடு, தனது கல்லூரி காதலி சிம்ரனை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை தேட வேண்டாம், நிம்மதியாக வாழ விடுமாறும் கூறியிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இருவரையும் மீட்டுத்தரும்ப்படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

சிம்ரனுக்கு கணவனாக மாறியுள்ள புஷ்பா, தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக வீட்டில் இருந்து செல்லும் போதே 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்