திருட்டு வீடியோக்களை தடுக்க பேஸ்புக்கின் அதிரடி திட்டம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

பேஸ்புக் வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் வேறு நபர்களின் வீடியோக்களை அனுமதியின்றி பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகின்றது.

இதனை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.

இதற்காக Source3 எனும் நிறுவனத்தினை கொள்வனவு செய்கின்றது.

இந்த நிறுவனமானது தனது இணையத்தளத்தின் ஊடாக வீடியோக்களின் ஒரிஜினல் பதிப்புக்கள் எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டக்கூடியது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தையே தற்போது பேஸ்புக் கொள்வனவு செய்கின்றது.

Source3 தளத்தின் ஊடாக விளையாட்டுக்கள், பாடல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பேஷன் நிகழ்வுகள் என்பவற்றின் வீடியோ தொகுப்புக்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் திருடப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட கணனியின் IP முகவரியையும் காட்டிக்கொடுக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers