முகேஷ் அம்பானியை பணக்காரராக்கிய ராசி எது தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை முறை

எந்தெந்த ராசிக்காரர்கள் வர்த்தக உலகில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.

2018ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்க்லேஷ் ஹாருண் வெளியிட்டுள்ளது. அவர்களில் எந்தெந்த ராசிக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்களில் 9.3 சதவிதத்தினர் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். குறிப்பாக முகேஷ் அம்பானி பெரிய நிலைக்கு உயர்ந்துள்ளார்.

ரிஷபம், சிம்மம், துலாம், மிதுனம், கும்பம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் 8.5 சதவிதத்தில் இருந்து 6.4 சதவிதம் வரை பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கன்னி ராசியைச் சேர்ந்த 9.70 சதவிதத்தினர் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். விருச்சிக ராசியைச் சேர்ந்த 9.2 சதவிதத்தினரும், மகர ராசியைச் சேர்ந்த 9 சதவிதத்தினரும் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர்.

சிம்ம ராசிக்காரர்களில் முக்கியமாக உயர்ந்த நபர் விப்ரோவின் அசீம் பிரேம்ஜி. கோட்டக் வங்கியின் உதய் கோட்டக் மீன ராசிக்காரர் ஆவார்.

ஆர்சலர் மிட்டலின் முதன்மை செயல் அதிகாரி எல்.என்.மிட்டல் மிதுன ராசிக்காரர் ஆவார். லூலு குழுமத்தின் யூசுப் அலி, கோத்ரெஜ் குழுமத்தின் கிறிஸ்டினா ஆகியோர் முறையே விருச்சிகம், மகர ராசிக்காரர்கள் ஆவர்.

ரிஷபம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களைச் சேர்ந்த சைரஸ் எஸ் பூனேவாலா, பிரிட்டானியா அதிபர் நஸ்லி வாடியா மற்றும் ஹிந்துஜா குழுமத்தின் எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் பணக்காரர்களாக உள்ளனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்