இந்த ஐந்து ராசிக்காரர்கள் தான் அதிக அவமானத்திற்கு ஆளாவார்களாம்! உங்க ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக தர்மசங்கடத்திற்கு ஆளாவார்களாம். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு பார்ப்போதம்.

கடகம்

மற்ற அனைத்து ராசிகளை காட்டிலும் கடக ராசிக்காரர்கள் அதிக தர்மசங்கடத்திற்கு ஆளாவார்கள், அதற்கு காரணம் அவர்களின் அதீத உணர்ச்சிதான்.

இவர்கள் எப்பொழுதும் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன்னை சுற்றி தேடிக்கொண்டே இருப்பார்கள். கடக ராசிக்காரர்கள் தர்மசங்கடம், கோபம் மற்றும் பதட்டம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளுக்கு அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

மேலும் அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது கூடுதல் உணர்திறனை ஏற்படுத்துகின்றன. தங்களை பற்றி மற்றவர்கள் எதிர்மறையாக தீர்மானிப்பது இவர்களுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சிறந்தவராகவும், அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆனால் அதில் குறைபாடுகள் ஏற்படும் போது அவர்கள் தர்மசங்கடமாக உணருகிறார்கள்.

அவர்களை பற்றியாய் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கே குறையும்போது அவர்கள் தோல்வி, அவமானம், தர்மசங்கடம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள்.

அவர்களை முட்டாளாக்கும் அனைத்து விஷயங்களையும் அவர்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அதிபுத்திசாலியாக இருந்தாலும் பெரும்பாலும் அவர்கள் அப்பாவியாகவே இருக்கிறார்கள். அவர்கள் தன்னை நம்பும் கூட்டங்களில் மட்டுமே இருக்க விரும்புவார்கள் அவர்களின் அப்பாவித்தனத்தை மற்றவர்கள் கண்டறிவது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

இவர்கள் நகைச்சுவையில் கலந்து கொள்ள விரும்புவார்களே தவரே இவர்களை வைத்து நகைச்சுவை உருவாகுவதை விரும்பமாட்டார்கள். தன்னை வைத்து மற்றவர்கள் சிரிப்பது அனைவரையுமே காயப்படுத்தும் ஒன்றாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிக கற்பனைத்திறன் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு தெரியாமல் சங்கடமான செயலை செய்துவிட்டோம் என்று நினைத்து இவர்கள் சங்கடப்படுவார்கள்.

இவர்களின் செயல்கள், பேசும் முறைகள் மற்றும் மற்றவர்களிடம் பழகும் விதம் இவற்றை வைத்தே இவர்கள் தர்மசங்கடத்தில் இருப்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் போது மனசோர்வு அடைந்தாலும் அதிலிருந்து விரைவில் வெளி வந்துவிடுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களை திறமையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும் காட்டிக்கொள்ள விரும்புவார்கள்.

ஆனால் சிலசமயம் அவர்களால் இது முடியாமல் போக வாய்ப்புள்ளது. நீங்கள் தர்மசங்கடமான ஒன்றை செய்யப்போகிறீர்கள் என்றால் அதனை உங்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும்.

இவர்களின் சில செயல்கள் இவர்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடும். சங்கடத்தில் மூழ்கி போவதை விட அதனை நகைச்சுவையாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers