முட்டைக்கோஸ் இலையை கால்களில் கட்டுங்கள்: 1 மணிநேரத்தில் அதிசயம்

Report Print Printha in மருத்துவம்
823Shares
823Shares
lankasrimarket.com

முட்டைக்கோஸில் மிகவும் குறைந்த அளவு கலோரியும், அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

இதில் விட்டமின் C, K, பொட்டாசியம், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள், ஆந்தோசையனின்கள், க்ளூட்டமைன் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

இத்தகைய முட்டைக்கோஸ் மூட்டு வீக்கங்கள், வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேவையான பொருட்கள்
  • முட்டைக்கோஸ்
  • அலுமினிய தகடு
  • பூரிக்கட்டை
  • பேண்டேஜ்
  • ஓவன்
எப்படி பயன்படுத்த வேண்டும்?

முட்டைக்கோஸின் இலைகளைத் தனியாகப் பிரித்து, நீரில் கழுவி உலர்த்திய பின் பூரிக்கட்டை அல்லது ஒயின் பாட்டில் கொண்டு சாறு வெளியேறும் அளவில் தேய்க்க வேண்டும்.

அதன் பின்பு அலுமினிய தகட்டில் முட்டைக்கோஸை விரித்து, ஓவனில் சில நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் வலியுள்ள இடத்தில் வைத்து, பேண்டேஜ் பயன்படுத்தி கட்ட வேண்டும்.

பிறகு 1 மணிநேரம் கழித்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை புதிய முட்டைக்கோஸ் இலைக் கொண்டு செய்து வந்தால், மூட்டு வீக்கங்கள் மற்றும் வலியில் இருந்து ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு

சிவப்பு முட்டைக்கோஸ் பச்சை முட்டைக்கோஸை விட, ஆந்தோசையனின்கள் வளமான அளவில் உள்ளது. எனவே இந்த சிகிச்சை முறைக்கு சிவப்பு வகை முட்டைக்கோஸை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்