சவுதியில் விவாகரத்தான மனைவி செய்த மோசமான செயல்.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் விவாகரத்தான கணவரை வாட்ஸ் அப்பில் மோசமாக திட்டி வந்த மனைவிக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள நீதிமன்றத்தை நாடிய இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப் மெசேஜால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து குமுறினார்.

அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்யப்பட்ட முன்னாள் மனைவி அவரை கடுமையாக திட்டி வாட்ஸ் அப் செய்துள்ளார்.

அதனை படிக்க படிக்க அவருக்கு மன உளைச்சல் அதிகமாகி விட்டது. அந்த பெண் பயன்படுத்தியிருந்த கடுமையான வார்த்தைகள் அந்த நபரை தூங்க விடாமல் செய்தன.

வார்த்தைக்கு வார்த்தை முட்டாள் என்றும், பிசாசு என்றும் மெசேஜ் செய்திருந்தார்.

இதையடுத்தே முன்னாள் மனைவி மீது வழக்குக் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிரிந்து சென்ற கணவனை கடுமையாக திட்டிய மனைவிக்கு மூன்று நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இனிமேல் இது போல திட்டி மெசேஜ் அனுப்பக் கூடாது என்றும் அந்த பெண்ணை நீதிபதி எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers