அதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in மொபைல்
80Shares
80Shares
lankasrimarket.com

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.

இந்நிறுவனம் தற்போது முதன் முறையாக உலகிலேயே அதிகூடிய சேமிப்பு வசதி கொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் கொள்ளளவானது 30TB ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி முன்னைய சேமிப்பு சாதனங்களை விடவும் வேகம் கூடுதலாக செயற்படக்கூடியது.

இதற்கு முன்னர் 15.36TB கொண்ட SSD கார்ட் ஆனது 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இரட்டிப்பு மடங்கு சேமிப்பு வசதி கொண்ட SSD கார்ட் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்