அதி உயர் சிறப்பம்சங்களுடன் LG அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
63Shares
63Shares
ibctamil.com

ஸ்மார்ட் கைப்பேசிகளின் செயற்திறன் நாளுக்கு நாள் மெருகேற்றப்பட்டு வருவதுடன் புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிணங்க LG நிறுவனமும் அட்டகாசமான சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

LG V35 ThinQ எனப்படும் குறித்த கைப்பேசியானது 6 அங்குல அளவுடையதும், 2880 x 1440 Pixel Resolution உடையதுமான OLED திரையினைக் கொண்டுள்ளது.

இத் திரையானது QHD+ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3300mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்