5G தொழில்நுட்பத்துடன் கூடிய Google Pixel 4: எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

கூகுள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Google Pixel 4 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்தவாரம் அளவில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது எதிர்வரும் 15 ஆம் திகதி அளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசிக்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் கூகுளின் முதலாவது கைப்பேசி என்பதனால் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வேறுபட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட Pixel 4 மற்றும் Pixel 4 XL என இரு பதிப்புக்களாக அறிமுகமாகின்றது.

எனினும் இக் கைப்பேசி தொடர்பான சிறப்பியல்புகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அடுத்துவரும் நாட்களில் அவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers