சாம்சுங் Galaxy M31 கைப்பேசியின் சிறப்பியல்புகள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்

சாம்சுங் நிறுவனம் Galaxy M31 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 6.4 அங்கல அளவுடையதும், Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினை உடைய இக் கைப்பேசியில் Samsung Exynos 9611 mobile processor தரப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்ட ஒரு பதிப்பினையும், 6GB RAM, 128GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட மற்றுமொரு பதிப்பினையும் சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் பிரதான கமெரா 64 மெகாபிக்சல்களை உடைய சென்சாரினைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் செல்ஃபி கமெரா தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

geeky-gadgets

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers