Huawei P40 Pro கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in மொபைல்

Huawei நிறுவனமானது விரைவில் தனது P40 மற்றும் P40 Pro எனும் இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றில் P40 Pro கைப்பேசி தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த கைப்பேசியானது 6.58 அங்குல அளவு, 2640 x 1200 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Kirin 990 mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகங்கள் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 50 மெகாபிக்சல்கள், 40 மெகாபிக்சல்கள் மற்றும் 12 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்கள் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்