எவ்வளவு பெறுமதியான வெளிநாட்டு பணத்தையும் இலங்கைக்குள் கொண்டுவர வாய்ப்பு?

Report Print Ramya in பணம்
1637Shares
1637Shares
lankasrimarket.com

எந்த ஒரு நபருக்கும் எவ்வளவு பெறுமதியான வெளிநாட்டு பணத்தையும் இந்த நாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய புதிய வெளிநாட்டு நாணய சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய சட்டமூலத்திற்கமைய வெளிநாட்டவர் அல்லது இந்த நாட்டு பிரஜை எந்த நாட்டு பணத்தையும் இலங்கைக்குள் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

அந்த பணம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில சட்டங்கள் அதற்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

எல்லையற்ற பணத்தை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடியும் என்ற போதிலும் அதே போன்று இந்த நாட்டில் இருந்து பணத்தை கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments