இலங்கையர்களுக்கு பரிசாக கிடைக்கும் 5 Audi மோட்டார் கார்! ஆபத்து குறித்து எச்சரிக்கை

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இணைய மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரபல மோட்டார் நிறுவனமான Audi இன் வர்த்தக சின்னத்தை பயன்படுத்தி பேஸ்புக் ஊடாக போலித் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து இலங்கையர்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி தகவலில் Audi மோட்டார் நிறுவனத்தின் 110 வது வருடத்தை முன்னிட்டு 5 மோட்டார் வாகனங்களை பரிசாக வழங்கவுள்ளதாகவும், அதற்கான போட்டியில் இணையுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக பேஸ்புக் பக்கத்திற்கு விருப்பம் வெளியிடுமாறும், நீங்கள் விரும்பும் மோட்டார் வாகன நிறத்தை பதிவு செய்து பகிருமாறு கோரப்பட்டுள்ளது.

அவர்களில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் 5 பேருக்கு பெறுமதியான Audi மோட்டார் வாகனம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்தக பலர் குறித்த பேஸ்புக் பக்கதை பகிரத் தொடங்கியுள்ளனர்.. சுமார் 47000க்கும் அதிகமானோர் அந்த பதிவினை பகிர்ந்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இதுவொரு போலிச் செய்தி என Audi Sri Lanka நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பேஸ்புக் பக்கத்தில் போலி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவனம் அவ்வாறான எந்தவொரு போட்டியையும் நடத்தவில்லை எனவும் அறிவித்துள்ளது.

இது குறித்து மிகுந்த அவதானமாக செயற்பாடு குறித்த நிறுவனம் மக்களை கேட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers