பெய்ஜிங்கில் இருந்து 2 மணிநேரத்தில் நியூயார்க் செல்லும் அதிவேக விமானம்: சீனா தயாரிப்பு

Report Print Kabilan in வாகனம்

பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, மிக அதிவேகமாக பறந்து செல்லும் வகையிலான விமானத்தை சீனா தயாரித்துள்ளது.

‘ஹைபர் சோனிக்’ எனும் அதிவேக விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம், மணிக்கு 6 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

தற்போதைய பெய்ஜிங் - நியூயார்க் இடையேயான விமான பயணம் 13 1/2 மணிநேரம் ஆகும். ஆனால் ஹைபர் சோனிக் மூலம், சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு 2 மணிநேரத்தில் செல்ல முடியும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தில், 8600 கிலோ மீட்டர் வேகத்துடன் இந்த விமானம் பறந்தது.

இந்த விமான சேவைக் கட்டணம், அதிகபட்சமாக 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers