ஊபர் சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை: சூதானமாக நடக்கவும்

Report Print Givitharan Givitharan in வாகனம்

குறைந்தளவு கட்டணத்தில் விரைவான போக்குவரத்து சேவையினை ஊபர் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இச் சேவையானது தற்போது உலகின் பல நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும் இச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சில சாரதிகளின் துர்நடத்தைகளால் ஊபர் சேவையினை பயன்படுத்துவதற்கு மக்கள் சற்று தயக்கம் காட்டுகின்றனர்.

இதனை நன்றாக உணர்ந்துகொண்ட ஊபர் நிறுவனம் தற்போது புதிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது பயணிகளுக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சாரிகள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

சான் பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்ட ஊபர் 91 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ளது.

அத்துடன் 3.9 மில்லியன் சாரதிகளையும் உலகளவில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்