மீண்டும் ஊபர் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Report Print Givitharan Givitharan in வாகனம்

உலக அளவில் ஒன்லைன் ஊடாக வாடகை போக்குவரத்து சேவையில் கொடிகட்டிப் பறக்கும் ஊபர் நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றது.

இதன்படி இந்த வருடத்தில் தற்போது இரண்டாம் கட்ட பணிக்குறைப்பினை செய்துள்ளது.

இதன்போது 3,000 பணியாளர்கள் தமது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் 3,700 பணியாளர்களை இடைநிறுத்தவுள்ளதாக ஊபர் நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது இப் பணிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப் பணிக்குறைப்புக்கான மின்னஞ்சல்கள் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Dara Khosrowshahi இனால் பணியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊபர் சேவை பாரிய அளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்