உயிரிழந்தவர்களுக்கு 4,820 கோடி ஓய்வூதியம் வழங்கி வரும் அரசு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் சுமார் 30 ஆயிரம் முதியவர்கள் உயிரிழந்தது தெரியாமல் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,000 கோடிக்கு மேல் ஓய்வூதியம் வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாடு முழுவதும் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய தகவல்களை அந்நாட்டு தேசிய தணிக்கை அலுவலக அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கடந்த 1989ம் ஆண்டுகளிலேயே உயிரிழந்த 29,321 முதியவர்களுக்கு இன்றளவும் ஓய்வூதியம் சென்றுக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 25 மில்லியன் யூரோ அனுப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு சராசரியாக 300 மில்லியன் யூரோ(48,20,54,92,500 இலங்கை ரூபாய்) அனுப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டு வந்துள்ளதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும், இவ்வளவு பெரிய தொகையானது வங்கிகள் மூலம் அனுப்பப்படுகின்றனவா? இந்த தொகையை யார் பெறுகிறார்கள்? எந்த ஓய்வூதியத்திலிருந்து இந்த தொகை அனுப்பப்படுகிறது? உள்ளிட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments