தனியாக இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற இளைஞன்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
471Shares

சீனாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் தனியாக நின்றிருந்த சிறுமியை வாடிக்கையாளர் இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமியின் அலறல் கேட்டு சுதாரித்த பொதுமக்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டுள்ளனர்.

சீனாவின் Cai Bian என்ற கிராமத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது அந்த அங்காடியில் 7 வயதேயான சிறுமி மட்டுமே இருந்துள்ளார். அவர்களது சொந்த கடை என்பதால் அலமாறியில் உள்ள பொருட்களை சரி செயவ்தில் அவர் இருந்துள்ளார்.

அச்சமயம் அந்த கடையில் 36 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் உள்ளே நுழைந்துள்ளார். கடையில் சிறுமி மட்டுமே இருப்பதை அறிந்த அவர், மெதுவாக சிறுமியின் பின்னால் சென்று அவரது வாயை பொத்தி அலாக்காக தூக்கிக் கொண்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமி பயத்தில் அலறவே பொதுமக்கள் சுதாரித்து அந்த நபரை விசாரித்துள்ளனர். இதில் பிடிக்கப்பட்ட அந்த நபரை பொதுமக்கள் கடுமையாக தாக்கி பொலிசில் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அந்த நபர், தாம் மது போதையில் இருந்ததாகவும், என்ன நடந்தது என்பது குறித்து தமக்கு எதுவும் நினைவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாதுகாப்பாக மீட்ட பொலிசார் அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்