விபத்துக்குள்ளான ஈரான் எண்ணைய் கப்பல் வெடித்துச் சிதறியது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
297Shares
297Shares
lankasrimarket.com

சீன நாட்டின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த ஈரான் நாட்டு எண்ணைய் கப்பலின் சில பகுதிகள் இன்று வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஈரான் எண்ணெய் கப்பலின் சில பகுதிகள், தீயை அணைக்கும் முயற்சிகள் பலனற்றுப் போனதால் வெடித்துச் சிதறத்தொடங்கியுள்ளது.

குறித்த சம்பவத்தால் அந்த கப்பலில் உள்ள சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணைய் சீன கடல் பகுதியில் பரவுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக கிரீன்பீஸ் என்னும் பசுமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான மிருதுவாக்கப்பட்ட பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது.

குறித்த கப்பலானது சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு உணவு தானியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின்மீது உள்ளூர் நேரப்படி கடந்த 6 ஆம் திகதி 8 மணியளவில் பயங்கரமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் ஈரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீபிடித்து எரிய தொடங்கியது. அதில் வந்த வங்காளதேசம் நாட்டை சேர்ந்த இருவர் மற்றும் 30 ஈரான் நாட்டினர் என மொத்தம் 32 பேர் மாயமாகியுள்ளனர். ஹாங்காங் நாட்டு கப்பலின் பெரும்பகுதியும் தீயில் எரிந்து நாசமானது. அதில் வந்த 21 பேரை சீன கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

எண்ணைய் கப்பலில் இருந்து ஆக்ரோஷமாக கொழுந்து விட்டெரியும் தீயை நுரையை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

மாயமான 32 பேரில் ஒருவர் மட்டுமே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 31 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்