32,000 அடி உயரத்தில் திடீரென்று உடைந்து நொறுங்கிய விமானத்தின் கண்ணாடி: அலறிய பயணிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
367Shares
367Shares
ibctamil.com

சீனாவில் விமான ஓட்டுனர் இருக்கும் கண்ணாடி திடீரென்று உடைந்ததால், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் Sichuan Airlines பயணிகள் விமானம் ஒன்று Chongqing-லிருந்து Lhasa-விற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. சரியாக உள்ளூர் நேரப்படி 06.27 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் Lhasa-விற்கு 09.27 மணிக்கு தரையிரங்கும் என்று கூறப்பட்டது.

இதனால் சுமார் 32,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று விமான ஓட்டுனர் இருக்கும் கண்ணாடி திடீரென்று உடைந்து நொறுங்கியுள்ளது.

இதனால் விமானம் காற்றின் வேகம் தாங்கமுடியாமல் சிறிது நேரம் தள்ளாடியதாகவும், பயணிகள் அனைவருக்கும் எச்சரிக்கையாக ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின் பத்திரமாக விமானநிலையத்தில் இறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விமானத்தின் கேப்டன் கூறுகையில், திடீரென்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அவசரத்திற்கு பயன்படுத்தப்படும் Squawk 7700 என்ற கோர்டை டிராபிக் கண்ட்ரோல் அறைக்கு தெரிவித்தோம்.

அதன் பின் விமானம் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு Shuangliu சர்வதேச விமானநிலையத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் விமானத்தில் இருந்த பயணி Zeng Jun கூறுகையில், விமானம் திடீரென்று காற்றில் தள்ளாடியது போன்று தரையிரங்கியது.

இதன் காரணமாக விமானத்தில் இருந்த பைகள், உணவுகள், கேபின் மேலே இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தன.

பயணிகள் அனைவரும் பீதியடைந்ததாக கூறியுள்ளார்.

Sichuan Airlines நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில், இதன் காரணமாக துணை ஓட்டுனருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் பயணிக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு எந்த ஒரு காயமும் இல்லை எனவும் அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் Shuangliu சர்வதேச விமானநிலையத்திலிருந்து Lhasa-வில் உள்ள Gonggar விமானநிலையத்தில் 11.50 மணிக்கு இறக்கவிடப்பட்டதாக கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்