கிம் ஜாங் உன் பயணித்த விமானத்தின் பின்னணி என்ன?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
837Shares
837Shares
lankasrimarket.com

வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க சீன நாட்டு விமானத்தில் சென்றுள்ளார்.

கிம் ஜாங்க் உன் 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் வடகொரிய அதிபராக பதவியேற்றதிலிருந்து வடகொரியாவின் பியாங்யாங்கிலிருந்து மிக நீண்ட விமானப் பயணத்தை மேற்கொண்டதில்லை.

இதுவே முதல் பயணம் ஆகும். இந்நிலையில், வடகொரிய அரசு கட்சியின் செய்தித்தாள் கிம் ஜாங் ஏர் சீனா போயிங் 747 விமானத்தில் பயணித்தார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சீயோலின் டாங்குக் பல்கலைக்கழகத்தின் வடகொரிய ஆய்வுகள் துறை பேராசிரியர் கோ யு ஹுவான் நேற்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வடகொரியா முழுமையான அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படவில்லை என்றால், அது நடைமுறை ரீதியான காரணமாக இருக்கலாம்.

ஆனால், அதே நேரத்தில் வடக்கில் கொரியாவுக்கு பின்னே சீனா இருக்கிறது என்பதை அந்நாட்டு மக்களுக்கு குறியீடாகக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்