வானிலிருந்து விழுந்த ஆக்டோபசும் நட்சத்திர மீனும்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவின் Shandong மாகாணத்திலுள்ள Qingdao நகரில் திடீரென்று வானிலிருந்து ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்ற கடல் உயிரிகள் விழத் தொடங்கியதைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பின்னர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவலாயின. Qingdaoவின் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டதால் அவை போலியான படங்கள் அல்ல என்பது உறுதியாயிற்று.

ஒரு ஆக்டோபஸ், mollusks, இறால் போன்றவற்றை படங்களில் காணலாம். சீனாவில் வீசிய பயங்கர புயலின்போது இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது.

கடல் நீரின்மீது சுழல் காற்றுகள் ஏற்படும்போது அதனால் கடல் உயிரிகள் வானத்திற்கு இழுக்கப்பட்டு பின்னர் வீசும் பலத்த காற்றினால் அவை வீசி எறியப்படுவதாக கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்