மூழ்கிய படகு மீது அடுத்தடுத்து ஏறிய பயணிகள்... 34 பேர் பலி: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தின் அதிர்ச்சிகர வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 3-ம் திகதியன்று சுலாவசி தீவிலிருந்து 189 பயணிகளுடன் செலயார் தீவை நோக்கி, ஒரு படகு சென்றுகொண்டிருந்தது.

படகுத் துறையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருக்கும்போது மோசமான வானிலை மற்றும் அதிக பாரம் காரணமாக அந்தப் படகு மெதுவாக மூழ்கத் தொடங்கியது.

இந்த விபத்தில் இதுவரையில் 34 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய இந்தோனேசியா பேரிடர் மேலாண்மைக் குழு செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ, படகு அபாய நிலையில் உள்ளது என்பதை உணர்ந்த கேப்டன் மக்களைக் காப்பாற்றுவதில் முழு கவனம் செலுத்தியதாலேயே ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

படகு மெதுவாகக் கடலில் மூழ்குவதும் பலர் அதன் மீது ஏறி தப்பிக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர்கள், அருகில் உள்ள ரப்பர் படகில் பதற்றத்துடன் இருப்பதுபோன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்