தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நோய்த்தொற்று

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
193Shares
193Shares
lankasrimarket.com

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் 2கிலோ எடை குறைந்துள்ளதுடன், இருவருக்கு நுரையீரல் நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள தி தம் லுஅங் கோகி பகுதியில், 11 முதல் 16 வயதுடைய கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர், 25 வயதுடைய தங்களது பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்பொழுது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக 13 பேரும் குகையிலேயே சிக்கி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில் கடந்த 17 நாட்களாக போராடி வந்த, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 3 கட்டமாக அனைவரையும் உயிருடன் நேற்று மீட்டெடுத்தனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட 13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், குகையில் சிக்கிய 13 பேரும் சரியான உணவின்றி மனஉளைச்சலில் இருந்துள்ளதால், தங்களது உடல் எடையில் 2 கிலோவை இழந்துள்ளனர்.

சிறுவர்களில் இருவருக்கு நுரையீரல் நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் சரிவர தூக்கமின்றி அயராது உழைத்த மீட்பு படையினர்களுக்கும் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்