ஐந்தறிவு ஜீவனின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க முடியாமல் வீல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலாளிக்கு ஐந்தறிவு கொண்ட நாய் உதவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Danilo Alarcon (46) கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நேர்ந்த விபத்து ஒன்றில் அவரது முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் Danilo நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து அவர் எங்கு வெளியில் சென்றாலும், 7 வயதாகவும் அவருடைய செல்ல பிராணி Rodrigo Duterte என்ற நாய், அதனுடைய மூக்கின் உதவியால் வீல் நாற்காலியை தள்ளி கொண்டு செல்ல உதவியுள்ளது.

சமீபத்தில் ஒரு நாள் Danilo மற்றும் அவருடைய செல்ல பிராணி Rodrigo, Davao நகர தெருவில் சென்று கொண்டிருக்கும்போது, அதனை பார்த்து வியந்து போன Faith Revilla என்ற பெண் அதனை வீடியோவாக படம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்று நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக தற்போது நேரில் பார்க்கும்பொழுது, என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் உள்ளேன். இவர்கள் இருவரையுமே கடவுள் ஆசிர்வதிக்க நான் வேண்டிக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்