குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோ நாட்டில் 9 மாத குழந்தைக்கு தாய்பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Hortencia Balcanzar - Gabriel Hernandez Reyes தம்பதியினருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இதில், 4 வது குழந்தை பிறந்து 9 மாதம் தான் ஆகியுள்ளது.

திருமணம் முடிந்த நாளில் இருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.சமையல் செய்து கொடுப்பதற்கும், வீட்டினை பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இருவருக்குமிடையே நல்ல ஒற்றுமை இல்லாத நிலையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று வெளியில் செல்ல வேண்டும் வேகமாக புறப்படு என கணவர் கூறியுள்ளார்.

அப்போது, பசியால் அழுத தனது 9 மாத குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் வருவதாக கூறியுள்ளார். இருப்பினும் நேரம் ஆனதால் கோபம் கொண்ட கணவர், பாலூட்டிக்கொண்டிருந்த தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் தனது துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியாகி மனைவி உயிழந்துள்ளார். தாயிடம் இருந்த சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...