இத்தாலியின் மிகவும் அதிர்ஷ்டசாலி இவர்தான்: துயரத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் உள்ள Genoa பாலம் உடைந்து விழுந்ததில் லொறி சாரதி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

37 வயதான அந்த நபர் தமது பணி முடித்து விபத்துக்குள்ளான குறித்த பாலத்தை கடக்க எத்தனிக்கையில், அவரது கண்முன்னே Genoa பாலம் உடைந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் இருந்து மீள முடியாதவராக நடந்தவற்றை விவரிக்கும் அவர், தமது கண் முன்னே சாலை உருக்குலைவதும், வாகனங்கள் சரிந்து விழுவதும் அதிர்ச்சியை தந்துள்ளது என்றார்.

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் கொண்ட குடும்பத்துடன் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இவரது லொறிக்கு முன்னே சென்ற வாகங்கள் அனைத்தும் விபத்தில் சிக்கிக்கொள்ள இவரது லொறி நூலிழையில் தப்பியுள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு வெகு நேரம் பிடித்தது என்றாலும் காயம் இன்றி தப்பியுள்ளார். தற்போது விபத்து குறித்த துயரத்தின் இடையேயும் இத்தாலியின் அதிர்ஷ்டசாலி நபர் என அங்கிருந்த மக்கள் இவரை கொண்டாடியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்