திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு குற்றமல்ல: உலக நாடுகள் என்ன சொல்கிறது?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

திருமணத்தை தாண்டிய உறவு தண்ட​னைக்கு உரிய குற்றமில்லை என்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஒரு பெண், தனது கணவரல்லாத வேறோருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு கொண்டால், தண்டனைக்குரிய குற்றம் என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுப்படி, குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு தான் தண்டனை வழங்கப்படும். தகாத உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு தண்டனை கிடையாது.

இந்நிலையில், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதில், திருமண பந்தத்தை தாண்டிய உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

மேலும், தற்கொலைக்கு தூண்டாத பட்சத்தில், 497-வது பிரிவு பயனற்றது எனக் கூறிய நீதிபதிகள் அந்த சட்டப்பிரிவை நீக்கியும் உத்தரவிட்டுள்ளனர்.

கணவருக்கு மனைவி அடிமை இல்லை என்றும், இருவரும் சரிசமமாக சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் நிலை என்ன ?

இந்த சட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரித்தானியாவில் இச்சட்டம் தற்போது அமலில் இல்லை.

பிரித்தானியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் தகாத உறவை குற்றமாக பார்ப்பதில்லை.

அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 17 மாகாணங்களில் மட்டும் தகாத உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கனடாவில் இது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இதை காரணமாக காட்டி, விவாகரத்து பெறும் வகையில் சட்டம் வழிசெய்கிறது.

மலேசியாவிலும் தகாத உறவு குற்றமே. ஜப்பானில் தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கணவனோ, மனைவியோ இதை காரணம் காட்டி விவகாரத்து பெறலாம்.

துருக்கி 1926 லும், தென்கொரியா 2015 லும் தகாத உறவை கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கியது.அதே நேரத்தில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் தகாத உறவு குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்