இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஏற்கனவே 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று வீடுகளை நாசம் செய்து ஒரு உயிரை பலி வாங்கிய நிலையில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவுள்ள ஒரு வலிமையான நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகிய Sulawesiயைத் தாக்கியுள்ளது.

இதனால் மத்திய மற்றும் மேற்கு Sulawesi பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. Sulawesi இந்தோனேஷிய தீவுகளில் நான்காவது பெரிய தீவாகும். அங்கு 18 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

நிலநடுக்கத்தின் காரணமாக எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்