திருமணமாகி கணவனுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் இளம் பெண் ஒருவர் 26 ஆண்டுகளுக்கு பின் தான் பெண் உருவில் வாழும் ஒரு ஆண் என்பதைக் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவின் ஹுனானின் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், திருமணம் ஆகி தன் கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருப்பினும் திருமணம் முடிந்து 1 ஆண்டுகள் ஆகிவிட்டதால், கருவுறாமல் இருப்பதற்கு என்ன காரண்ம் என்பதை அறிய மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனால் மருத்துவர்கள் அவரை முழுவதுமாக பரிசோதனை செய்த போது, அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு, அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில், மருத்துவ பரிசோதனையில் தான் பெண் இல்லை எனவும், பெண் உருவில் 26 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆண் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமூக பார்வையில் ஒரு பெண் என தோற்றம் ஆளிக்கும் அவர், உடல் ரீதியாக ஆணுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளார் என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றது.

அவரது உடலும் தோற்றமும் உலகை மட்டும் அல்லாமல் அவரையும் நம்பவைத்தது.

ஒரு பெண்ணாக அவர் சமூக அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அவருடைய உடலில் மறைந்திருக்கும் விரைகளின் வளர்ச்சி, முழுமையடையாத பாலுறுப்புச் சுரப்பி வளர்ச்சி அவர் ஒரு ஆண் என உறுதி படுத்தியுள்ளது.

Sexual Deformity எனப்படும் மருத்துவர்கள் தெரிவிக்கும் இந்த பாலியல் குறைபாடு, இவர் பெண் உருவில் வாழ்ந்து வரும் ஒரு ஆண் என தெரியபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers