குடும்பத்திற்காக கையை துண்டாக வெட்டிக் கொண்ட இளம் பெண்..பொலிஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்லோவேனியாவில் பெண் ஒருவர் தன் குடும்பத்தினருக்கு பணம் தேவைப்பட்டதால், காப்பீட்டு தொகைக்காக கையை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லோவேனியாவில் 21 வயது இளம் பெண் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் என 4 பேரை பொலிசார் திடீரென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து கூறுகையில், இவர்கள் முறைகேடாக காப்பீடு பெறுவதற்காக 21 வயது இளம் பெண்ணின் கையை வெட்டியுள்ளனர். இதற்காக இவர்கள் சமீபத்தில் காயங்களுக்கான காப்பீடு எடுத்துள்ளனர்.

சுமார் நான்கு லட்சம் ஈரோக்கள் இழப்பீடு பெறுவதற்காகவும் காப்பீடு திட்டம் வாயிலாக மாதம் மூவாயிரம் ஈரோக்கள் பெறுவதற்காகவும் அப்பெண் இந்த காரியத்தைச் செய்துள்ளார்.

இதன் காரணமாகவே அந்த இளம் பெண் மற்றும் உறவினர்களை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் கையை குடும்பத்தினர் வீட்டின் உள்ளே வைத்து வெட்டியுள்ளனர், அதன் பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது வேண்டுமென்றே வெட்டப்பட்டு துண்டாகிப் போன கையை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

நிரந்தரமாக அவரது கை முடமாகவேண்டும் என்பதை உறுதிப்படுத்த அக்குடும்பத்தின் அவ்வாறு நடித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய நேரத்தில் அந்த பெண்ணின் கையை எடுத்து கொண்டு வந்து சிகிச்சைக்கு கொடுத்ததால், சிகிச்சை நல்ல படியாக முடிந்துள்ளது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்ட குடும்பத்தினர் நான்கு பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers