157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்..கடும் கோபத்தில் குடும்பத்தினர்! எதற்காக தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் விபத்து எப்படி நடந்து, என்ன காரணம் என்பது குறித்து தொடர்புடைய விமான நிறுவனம் சரியாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 பயணிகள் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது விமானம் புறப்பட்ட ஆறாவது நிமிடங்களிலே கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதால், இதில் பயணம் செய்த பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

157 பேரை பலி கொண்ட இந்த விமான விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ள நிலையில் அதில் இருக்கும் தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் விமான நிறுவனம் இறந்த பயணிகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ஏற்பாடு ஒன்று செய்துள்ளது.

இதனால் குடும்பத்தினர் அங்கு சென்றால் விபத்திற்கான காரணம் அல்லது ஏதேனும் தகவல்கள் கூறுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றுள்ளனர்.

ஆனால் அந்த சந்திப்பில் விமான நிறுவனத்தின் பதில் அவர்களுக்கு எந்த ஒரு திருப்தியையும் அளிக்கவில்லை.

இது குறித்து ஏமன் நாட்டைச் சேர்ந்த Abdulmajid Shariff என்ற நபர் கூறுகையில், இந்த விமான விபத்தில் என்னுடைய மைத்துனன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் இந்த சந்திப்பில் இறந்தவர்களின் உடல்கள் மற்றும் என்ன காரணம் என்பது குறித்து கேட்டோம்.

ஆனால் அவர்கள் எந்த ஒரு சரியான விளக்கமும் அளிக்கவில்லை, நான் கோபத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிலரும் இந்த சந்திப்பு எதற்கு வைத்தார்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers