364 பேரை காவுகொண்ட விமான விபத்து... விமானிகளால் ஏற்பட்டதா? வெளிவரும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

போயிங் நிறுவனத்தின் மாக்ஸ் ரக விமானங்கள் இரண்டு அடுத்தடுத்து விபத்துக்குள்ளாவதற்கு முக்கிய காரணம் விமானிகளே என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 மாதங்களுக்கிடையே போயிங் நிறுவனத்தின் 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 364 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பில் நடுங்க வைக்கும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முக்கியமாக விமானிகள் எவரும் Flight Simulator பயன்படுத்தி கற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.

அமெரிக்க நாட்டின் பெரும்பாலான விமானிகளுக்கு போயிங் நிறுவனத்தின் மாக்ஸ் ரக விமானத்தில் உட்படுத்தியுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரியவில்லை எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மெலும், அமெரிக்காவின் பெரும்பாலான விமான நிறுவனங்களில் பணியாற்றும் விமானிகள் மாக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான Flight Simulator தங்களுக்கு வேண்டும் எனக் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ஏற்கெனவே போயிங் விமானங்களில் பறந்துள்ள விமானிகளுக்கு Flight Simulator தேவையில்லை என கூறியுள்ளனர்.

இதனிடையே விமானிகள் குழு ஒன்று மாக்ஸ் ரக விமானங்கள் தொடர்பில் 13 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றையும் 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இதில் மாக்ஸ் ரக விமானங்களில் உள்ள புதிய தொழில்நுட்பம் தொடர்பில் குறிப்பிடவில்லை.

லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான போது மென்பொருள் கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்து ஒருவார காலத்தில் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஆனால் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், விமானிகளுக்கு சிறப்பு பயிற்சி ஏதும் தேவை இல்லை என்பதே.

எத்தியோப்பியா மற்றும் லயன் ஏர் விமானங்களின் கருப்பு பெட்டிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

இதில் இரண்டு விமானங்களின் விபத்து காரணமும் ஒரேபோன்று இருப்பதாக தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்