74 ஆயிரம் முறை காட்டுத் தீ.. அமேசானை நாசப்படுத்தியவர்கள் அவர்கள் தான்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிரேசிலின் அமேசான் காடுகளுக்கு தீ வைத்தது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தான் என அந்நாட்டு ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள், உலகின் கார்பன்-டை- ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், சமீபகாலமாக இங்கு அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் வேதனையடைந்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புவியின் நுரையீரல் எரிந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 15ஆம் திகதி முதல், அமேசான் காடுகளில் 9 ஆயிரத்து 500 இடங்கள் காட்டுத் தீ-க்கு இரையாகின. எட்டு மாத காலத்தில் மட்டும் 74 ஆயிரம் முறை அமேசானில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

சா பாலோ நகரில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக காட்டுப்பகுதியை ஒட்டிய நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், காட்டுத் தீக்கு காரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) தான் என்று பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘NGOக்கள் தான் அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீயை தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஏனென்றால், அவர்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் உள்ள NGOக்களுக்கான நிதியை அரசு நிறுத்தியதில் இருந்து தான், இது போன்ற காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இது தொடர்பான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்