27 அடி நீளம் கொண்ட கொடிய அனகோண்டா! அருகில் சென்ற நபருக்கு? சிலிர்க்க வைக்கும் காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் ஆற்றுக்கு அடியில் தண்ணீரில் இருக்கும் சுமார் 23 அடி நீளம் கொண்ட கொடிய அனகோண்டா பாம்பின் அருகில் சென்று டைவர் ஒருவர் வீடியோ எடுத்திருப்பது, பார்க்கும் போதே சிலிர்க்க வைக்கிறது.

Bartolomeo Bove இவர் நீருக்கு அடியில் சென்று வீடியோ எடுப்பதை பரபசனலாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஜுலை மாதம் பிரேசிலின் Mato Grosso do Sul-வில் இருக்கும் Formoso ஆற்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின் உள்ளே சுமார் 27 அடி நீளம், சுமார் 90 கிலோ எடை கொண்ட அனகோண்டா இவரின் கமெராவில் சிக்கியுள்ளது.

இதனால் இந்த அற்புதமான தருணத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, அனகோண்டாவின் அருகிலே சென்று, அதன் நடவடிக்கைகளை சுமார் 3 நிமிடத்திற்கு மேல் வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், கமெராவின் முன்னே வரும் அனகோண்டா, அடிக்கடி தன்னுடைய நாக்கை வெளியில் காண்பித்து, அருகில் வந்து மிரட்டுகிறது. அப்போதும் சற்றும் பயப்படாத Bartolomeo Bove அப்படியும் விடாமல் தொடர்ந்து வீடியோ எடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் போதே நம்மையே சிலிர்க்க வைக்கிறது. பொதுவாகவே அனகோண்டா பாம்புகள் மனிதனை அப்படியே விழுங்குபவை, ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அருகில் சென்று, வீடியோ எடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்