விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர்... பீதியில் அலறிய பயணிகள்! அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் பயணிகளுடன் விமானம் புறப்படவிருந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென்று அவசர கால கதவை திறந்ததால், பயணிகள் அனைவரும் பீதியடைந்தனர்.

Thai Smile நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த வியாழக்கிழமை Chiang Mai-வின் சர்வதேச விமானநிலையத்திலிருந்து தலைநகர் பாங்காக்கிற்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.40 மணிக்கு 86 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

(Image: ViralPress)

அப்போது விமானத்தில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென்று விமானத்தின் அவசர் கால கதவை திறந்ததால், விமானத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்ட பயணிகள் சிலர் அலறியுள்ளனர், பீதியடைந்துள்ளனர். இது குறித்து விமானிக்கு தெரியவர, விமானி உடனடியாக இந்த சம்பவம் குறித்து விமானநிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

(Image: ViralPress)

விரைந்து வந்த அதிகாரிகள், அவரை பிடித்து அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த பயணி மது போதையில் எல்லை மீறி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பயணி யார்? இதை வேண்டுமென்றே செய்தாரா? இல்லை மது போதையில் செய்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(Image: ViralPress)

இந்த சம்பவத்தினால் உள்ளூர் மதிப்பு படி 600,000 பாட் அளவிற்கு சேதமடைந்திருப்பதாக விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விமானத்தின் அவசர கால கதவு அடைக்கப்பட்டு, சுமார் 90 நிமிடங்களுக்கு பின் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் இது போன்று பயணிகள் மது அருந்திய படி வந்து, ஏதேனும் தவறு செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

(Image: ViralPress)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்