227 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த 17 சடலங்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

காணாமல் போன முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 17 சடலங்கள், மெக்சிகனில் உள்ள பள்ளி அருகே ரகசிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனவர்களை பற்றி மெக்சிகன் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இராபுவாடோவில் உள்ள ஒரு பாலர் மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகே ரகசிய கல்லறையில் இருந்து 17 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில், செப்டம்பர் மாதமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த, இரண்டு வாரங்களுக்கு முன் மாயமான முன்னாள் பொலிஸ் அதிகாரி, அன்டோனியோ ராமரெஸ் (38) என்பவரின் உடலும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை நேரில் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சனிக்கிழமையன்று உறுதி செய்துள்ளனர்.

'Missing in Irapuato' என்ற பெயரில் என்று அழைக்கப்படும் ஒரு தேடல் குழு, பெரும்பாலான உடல்கள் சிதைவின் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

மேலும், மற்ற சடலங்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரகசிய கல்லறை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாராவின் புறநகரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட 227 மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நவம்பரில் வெளியிடப்பட்ட அரசாங்கத் தகவல்களின்படி, 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் குவானாஜுவாடோ மாநிலத்தில் 2,865 படுகொலைகள் நடந்திருப்பதாக கூறியிருந்தது.

மெக்ஸிகோவில் இந்த ஆண்டு குறைந்தது 390 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குவானாஜுவாடோவில் மட்டும் 50 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்