சீனாவிலிருந்து பரவி உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது, எப்படி பரவினது என்பது குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
இதற்கிடையில், சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட Wuhan நகரில் பெரிதும் விரும்பி உண்ணப்படும் வௌவால் சூப் ஒன்றுதான் இந்த கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பெண் ஒருவர் வௌவால் சூப் அருந்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சாப் ஸ்டிக் மூலம் வௌவாலை எடுத்து அவர் கடிக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
சமீபத்தில், சீன அறிவியலாளர்கள், இந்த புதிய கொரோனா வைரஸ், மற்றும் வௌவால்களில் காணப்படும் ஒரு வித வைரஸ், ஆகிய இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்ததாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் மற்றும் எபோலா வைரஸ் ஆகியவையும் வௌவாலிலிருந்தே தோன்றியதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வைரஸ் இப்படி வேகமாக பரவும் என நிபுணர்கள் எண்ணவில்லையாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அது பரவி உலகையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில் எப்படி இந்த வைரசுக்கான தடுப்பூசியை தயாரிப்பது என மருத்துவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்களாம்.
எப்படியும் தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.
