உயிர்கொல்லி கொரோனா வைரஸால் சீனாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
#S

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில் சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படும் வுஹான் நகரில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் நலமாக இருக்கின்றனர்.

மேலும் வுஹான் நகரத்தின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்குப் புறப்பட்டதாக IANS செய்தி நிறுவனம் மூலம் தெரியவந்துள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தற்போது வுஹானில் உள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்களின் சுகாதார நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய ஆசிரியர் ஒருவர், கடந்த வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர், வுஹானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்