புதை குழியில் சிக்கிய குட்டி... உயிரோடு சாப்பிடும் கழுதை புலிகள்! காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் யானை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் புதை குழியில் சிக்கிய தாய் யானை, அதன் குடியை காப்பாற்ற முடியாமல் தவித்து இறுதியில் இறந்து கிடந்த புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

ஜிம்பாப்வேயின் Mana Pools பூங்காவில் இருக்கும் சமவெளியில், தாய் யானை மற்றும் குட்டி யானை இரண்டும், அங்கிருக்கும் புதை குழியில் சிக்கிக் கொள்கின்றன.

இதனால் அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு கழுதைப் புலிகளின் கூட்டம் வந்துவிடுகிறது.

அவரை யானைகளை வேட்டையாட துடிக்கிறது. அப்போது புதை குழியில் சிக்கி சோர்வற்று கிடந்த குட்டி யானையை முதலி கழுதை புலிகள் கடித்து குதறுகின்றன.

இதைக் கண்ட தாய் யானை அதை காப்பாற்றுவதற்கு துடிக்கிறது. ஆனால் முடியாமல் போவதால், விரக்தியில் அங்கிருக்கும் சேற்றினை துதிக்கை மற்றும் தந்தத்தால் வீசுகிறது.

அதில் ஒரு கழுதைப் புலி, குட்டியானையின் காலை தனியாக துண்டாக கடித்து எடுத்து செல்கிறது. அப்படியெ குட்டி யானை இறந்துவிட, அதன் பின் தாய் யானையும், அதில் இருந்து மீள முடியாமல் பசி மற்றும் குட்டியை பரிகொடுத்த ஏக்கத்தில் இறந்துவிடுகிறது.

சேற்றில் கிடக்கும் தாய் யானை மீது கழுகளின் கூட்டம் வந்துவிடுகிறது.

இந்த காட்சியை ஜேர்மனியை சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் Jens Cullman(50) எடுத்து தாய் மற்றும் குழந்தையின் உதவியற்ற அவலநிலை என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்