கொரோனா வைரஸ் - காலதாமதம் வேண்டாம்: பிரித்தானியா அமெரிக்காவிடம் கெஞ்சிய இத்தாலி பத்திரிகையாளர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இனியும் கால தாமதம் வேண்டாம், மக்கள் தேவையின்றி இறந்துகொண்டிருக்கிறார்கள், மொத்தமாக நாட்டை முடக்காவிட்டால் ஆபத்தில் முடியும் என இத்தாலிய பத்திரிகையாளர் ஒருவர் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு இத்தாலி.

இங்குள்ள 60 மில்லியன் மக்களில் 21,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 1,442 பேர் மரணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் மருத்துவத்திற்கு பெயர்போன இத்தாலி தற்போது ஒரு தொற்றுநோயால் மொத்தமாக முடங்கிப்போயுள்ளது.

இந்த நிலையில், நாங்கள் செய்த தவறுகளை கண்டிப்பாக செய்துவிடாதீர்கள் என பிரித்தானிய அமெரிக்க அரசுகளிடம் இத்தாலி பத்திரிகையாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாமதம், மருத்துவத்தில் தலைசிறந்து விளங்குவதால் ஏற்பட்ட மெத்தனம் என கொரோனா வியாதியை இத்தாலியர்கள் பொருட்டாக கருதவில்லை.

ஆனால் சுதாரித்துக்கொள்ளும் முன்னர் பல ஆயிரம் பேர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகினர்.

தற்போது இத்தாலிய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், பாதிப்பு எண்ணிக்கையில் சரிவு மற்றும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்கிறார்,

இத்தாலிய பத்திரிகையாளரான Mattia Ferraresi. இத்தாலிய மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும், மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட்டுள்ளதால் இந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகள் உடனடியாக மொத்தமாக முடக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள Mattia Ferraresi,

பிரித்தானிய பிரதமர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்றும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்,

தேவையின்றி இறப்பு விகிதம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவுப் பொருட்களுக்கான அங்காடி மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறந்திருக்க அனுமதித்துவிட்டு, மொத்தமாக முடக்க்ப்பட்டால் மட்டுமே பிரித்தானியா கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற கொடுக்குப்பிடியில் இருந்து மீளமுடியும் என அவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1,140 பேர் இலக்காகியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்