கொரோனாவால் ஒரேநாளில் 368 பேர் பலி: அச்சத்தில் இத்தாலிய மக்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரேநாளில் 368 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் கொரோனாவின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால், நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் 21,157 இலிருந்து 24,747 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தாக்குதலால் ஒரேநாளில் 368 பேர் உயிரிழந்திருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை1,441 ல் இருந்து 1,809 ஆக உயர்ந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவிற்கு வெளியே கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது கடுமையாக தாக்கப்பட்ட நாடு இத்தாலி என்று நம்பப்படுகிறது. கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடும் முயற்சியில் ஒரு வாரத்திற்கு முன்னர் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அப்படி இருந்தும்கூட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்