கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க 50 மில்லியன் யூரோ செலவில் ஸ்பெயினில் இரவு-பகலாக நடக்கும் வேலை

Report Print Basu in ஏனைய நாடுகள்
84Shares

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க ஸ்பெயின் புதிய மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறது.

மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகில் ஒரு புதிய தொற்றுநோய் மருத்துவமனையை உருவாக்க பல கிரேன்கன் உதவியுடன் இரவு பகலாக வேலை நடைபெற்று வருகிறது.

இந்த புதிய மருத்துவமனை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்கனவே ஸ்பெயினில் நடந்து வருகிறது, இது நாட்டின் பொது சுகாதார அமைப்பைக் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

45,000 சதுர மீட்டரில் இசபெல் ஜென்டல் மருத்துவமனையை கட்டியெழுப்ப ஜூலை முதல் கட்டடம் கட்டும் தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

புதிதாக கட்டும் மருத்துவமனைியல் சுகாதார அவசரகாலத்தில் 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியுமாம்.

மாட்ரிட்டின் பிராந்திய அரசாங்கம் மருத்துவமனையை உருவாக்க 50 மில்லியன் யூரோக்களை செலவிடுகிறது.

புதிய மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் நோயாளிகளை கண்காணிக்கும் வகையில் ஜன்னல்களுடன் கட்டப்படுகிறதாம்.

எவ்வாறாயினும், புதிய மருத்துவமனையைத் திறப்பது மாட்ரிட் பிராந்தியத்தில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை சமாளிக்க மிகவும் தாமதமாக இருக்கும், இது கவலையளிப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்