சீக்கிரமாக வீடு திரும்பியபோது மனைவியுடன் இருந்த நபர் மாயமானதை கவனித்த கணவன்: தேடலில் தெரியவந்த உண்மை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
970Shares

மெசிகோவில் வாழும் ஒருவர், ஒருநாள் முன்கூட்டியே வீடு திரும்பும்போது தன் மனைவியுடன் வேறு ஒரு நபர் இருப்பதை கவனித்துள்ளார்.

Jorge என்ற அந்த நபர் வீட்டுக்குள் இருந்த ஆணை தேடும்போது, தன் வீட்டிலிருந்த சோபா செட்டுக்குப் பின்னால் ஒரு ஆணின் உருவம் தெரிவதைக் கண்டு அந்த ஆளை பிடிக்க ஓட, அதற்குள் அந்த ஆள் மாயமாகிவிட்டிருக்கிறார்.

அந்த ஆள் எங்கே போனார் என வியப்படைந்த Jorge, சோபாவை நகர்த்த, சோபாவுக்குப் பின்னால் ஒரு பெரிய பள்ளம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த பள்ளத்துக்குள் Jorge இறங்க, அது வெறும் பள்ளம் அல்ல, அது ஒரு சுரங்கப்பாதை என தெரியவந்திருக்கிறது.

அந்த சுரங்கப்பாதை சற்று தொலைவில் உள்ள மற்றொரு வீட்டில் சென்று முடிவடைந்துள்ளது.

தனது வீட்டில் தான் பார்த்த அதே ஆள் அந்த வீட்டில் இருப்பதைக் கண்ட Jorgeக்கு பிறகுதான் உண்மை தெரியவந்துள்ளது.

Jorgeஇன் வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள ஒரு வீட்டில் வாழும் Alberto என்பவருக்கும், Jorgeஇன் மனைவி Pamelaவுக்கும் தவறான உறவு இருந்துள்ளது.

Jorge வீட்டில் இல்லாதபோது Pamelaவை சந்திப்பதற்காக Alberto இரண்டு வீடுகளுக்கும் இடையில் சுரங்கப்பாதை ஒன்றை அமைத்துள்ளார் என்பது புரியவே, Jorge Albertoவுடன் கட்டிப்புரண்டு சண்டையிட பொலிசார் வந்து சண்டையில் தலையிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்ததாம், காரணம், Alberto ஒரு கட்டிடப்பணியாளர்!

Facebook

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்