ஆண் நண்பருடனான தொடர்பை மறைத்த 65 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி! சிங்கப்பூர் அரசு விதித்த அதிரடி தண்டனை

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
683Shares

சிங்கப்பூரில் தனது ஆண் நபரை அடிக்கடி சந்தித்ததை மறைத்த 65 வயது பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் கொரோனா பரவழைத்த தடுக்க தீவிரமான நடவடிக்கிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் சிங்கப்பூர் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்க அவர்களுக்கு மிக நெருக்கமான தொடர்பில் இருந்த ஒவ்வொரு நபர்களையும் குறித்து சோதனை செய்து கண்காணித்து வருகிறது.

இதனால் அந்நாட்டில் இதுவரை 58,836 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், அதில் வெறும் 29 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

ஓ பீ ஹியோக் என்ற 65 வயதான பெண் கடந்த ஆண்டு பிப்ரவரிமாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கண்காணிப்புக்குல் அவர் வந்தார்.

பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனைவரது தகவலையும் வழங்கிய ஓ பீ ஹியோக், ஒரே ஒருவரது தகவலை மட்டும் கொடுக்காமல் மறைத்துள்ளார்.

அவர் தோற்றால் பாதிக்கப்படுவதற்கு முன் வாரங்களில் அவரது நெருங்கிய நண்பரான 72 வயதான லிம் கியாங் ஹாங்கை 5 முறை சந்தித்துள்ளார்.

இருவரும் அவர்கள் அடிக்கடி வெளியே செல்கிறார்கள் என்பதை அவரது குடும்பத்தினரோ அல்லது லிம் குடும்பத்தினரோ கண்டுபிடிப்பதை விரும்பவில்லை.

இது தெரிந்தால் அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்கள் காதல் உறவில் இருப்பதாக சந்தேகிப்பார்கள் என்றும் அவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக வதந்திகளை பரப்புவார்கள் என்று நினைத்த அவர் எல்லாவற்றையும் மறைத்துள்ளார்.

ஆனால், சிசிடிவி காட்சிகள், அழைப்பு பதிவுகள் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகள் இவர்களது சந்திப்புகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஓ பீ ஹியோக் மருத்துவமனையில் பிப்ரவரியில் அனுமதிக்கப்பட்டபோது, லிம் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் அவர்களின் பயணங்கல் மற்றும் சந்திப்புகளை ரகசியமாக வைத்திருக்கும்படி அவரிடம் கேட்டார்.

பின்னர், மார்ச் மாதம் லிம் கியாங் ஹாங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஓ பீ ஹியோக் மீது சுயநலமாக தகவல்களைத் தடுத்து நிறுத்தி, பொது நலனுக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும், கொரோனா பரவக் காரணமாகவும் அவர் இருந்துள்ளார்.

தொடர்புகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஓ பீ ஹியோக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக 10,000 சிங்கப்பூர் டொலர் அபராதமும், 5 மாத சிறைத்தண்டனையம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்