முதியோர் இல்லத்தில் கொரோனாவால் இறந்த பெண்மணி... இரண்டு குடும்பங்களில் குழப்பத்தை உண்டுபண்ணிய ஒரு தவறான செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
0Shares

ஸ்பெயினில் முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த Rogelia Blanco (85) என்ற பெண்மணி கொரோனாவால் இறந்துபோனதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.

கொரோனா விதிகள் காரணமாக அவரது இறுதிச்சடங்குக்கு கூட செல்ல முடியாத நிலையில், உறவினர்கள் வீடுகளிலேயே துக்கம் அனுஷ்டிக்கவேண்டியதாயிற்று.

ஆனால், 10 நாட்களுக்குப் பின் முதியோர் இல்லத்துக்கு Rogelia திரும்பிவிட்டதாக, அதே முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரது கணவரான Ramon Blanco குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்க, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உண்மையில், அவர் கொரோனா சிகிச்சைக்காக வேறொரு இடத்துக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சைக்குப்பின் மீண்டும் முதியோர் இல்லத்துக்கு திரும்பியுள்ளார்.

இறந்துபோனதாக கருதப்பட்ட Rogelia உயிருடன் இருப்பதாக தகவல் வந்ததால் அவரது குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், மற்றொரு குடும்பத்துக்கு ஏமாற்றத்தையளிக்கும் ஒரு செய்தி கிடைத்துள்ளது.

ஆம், உண்மையில், Rogelia இறந்துபோனதாக அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில், அவரது அறையிலிருந்த மற்றொரு பெண்மணிதான் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டு அவரைக் காண வந்த அவரது சகோதரர், தன் சகோதரி 10 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த குளறுபடி குறித்து நீதிமன்றத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்