வலியால் துடிதுடித்த பேட்ஸ்மேனை கண்டுகொள்ளாத வீரர்கள்: திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
590Shares
590Shares
ibctamil.com

டெல்லி ரஞ்சிக்கோப்பை போட்டியில் பந்து அடித்து துடிதுடித்த பேட்ஸ்மேனை கண்டுகொள்ளாத சக வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி- விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியின் போது டெல்லி வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில், பேட்ஸ்மேன் துடிதுடித்து தரையில் விழுந்துள்ளார்.

வேதனையில் துடித்த அந்த வீரருக்கு உதவ டெல்லி அணி வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட எவருமே முன் வராதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எதிர்முனையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் முன்வந்து, மைதானத்துக்கு வெளியில் இருந்து உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனால் பல ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ள கண்டனம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

அதில், “கிரிக்கெட் போட்டியில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாதா.... மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என டெல்லி கேப்டன் ரிஷாப் பாண்டை டேக் செய்து அந்த ரசிகர் கூறியுள்ளார்.

அப்போட்டியில், ஏழு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்