எனக்கு உதவியாக இருந்ததே பேஸ்புக் தான் என கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி கண்ணீர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் முமகது சமிக்கும், ஹசின் ஜகான் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷமி தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காததால் தியேதர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி கிரிக்கெட் வீரர் ஷமிக்கு, சில பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக கூறி சில புகைப்படங்களை அவரது மனைவி ஹசின் ஜகான் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இது இணையதளங்களில் வைரலாகி மிகப்பெரிய சர்ச்சையானதையடுத்து இதற்கு ஷமி மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் தன்னிடம் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவரது மனைவி ஹசின் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்தப் பதிவை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஜகானின் அக்கவுண்டும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதால், யாரை கேட்டு எனது அக்கவுண்டை முடக்குனீர்கள் என்று ஜகான் கேள்வி கேட்டுள்ளார்.

தான் பதிவிட்ட அனைத்தையும் பேஸ் புக் நிர்வாகம் நீக்கவிட்டதாகவும், யாரும் எனக்கு உதவாத சமயத்தில், நம்பிக்கையற்று இருந்ததாகவும், பேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படங்களே எனக்கு உதவியதாக கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக ஜகான் கொடுத்த புகாரில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஷமியை கைது செய்து பொலிஸ் எந்த நேரமும் விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers