ஒரே நாளில் 4 வித விளையாட்டு போட்டிகளில் தோல்வி: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியா நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட், கால்பந்து, ரக்பி, டென்னிஸ் என நான்கு வகை விளையாட்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில், ஜூன் 16ஆம் திகதி நடந்த போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, அன்றே நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அந்த அணி நிர்ணயித்த 343 ஓட்டங்களை இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா அணி விளையாடியது.

ஆனால், 304 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல் அவுஸ்திரேலியாவில் நடந்த ரக்பி தொடரில், அயர்லாந்து அணியிடம் சொந்த மண்ணிலேயே அவுஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது.

AP/Andy Brownbill

மேலும், ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில், அவுஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியோஸ் 7-6, 2-6, 6-7 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார்.

GETTY

இதன்மூலம், அவுஸ்திரேலியா ஒரே நாளில் நான்கு விதமான விளையாட்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்