கோஹ்லியின் மனைவி அனுஷ்காவை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லியின் மனைவி அனுஷ்காவை நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

தற்போது உள்ள காலத்தில் மற்ற இடங்களை விட சமூகவலைத்தளங்களிலே விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லியின் மனைவி நாயுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த #Pixel2XL #TeamPixel என்ற ஹேஷ்டேக்குகளைச் சேர்த்து என்று கூகுளின் இந்திய ட்விட்டர் பக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனுஷ்கா ஐபோன் டுவிட்டரில் இருந்து தான் இது பதிவு செய்ததாகக் கவனிக்காமல் விட்டுவிட்டார் அனுஷ்கா.

ஆனால் அமெரிக்காவின் பிரபல யூட்யூபர்களில் ஒருவரான மார்கியூவஸ் பிரவுன்லி, இது எப்படி மீண்டும் மீண்டும் நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவங்கள் மிகவும் வேடிக்கையாக உள்ளன சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏற்கனவே இவர் கேல் கடோட் வாவே நிறுவனத்தின் ஸ்மார்ட்போனிற்காக பதிவு செய்திருந்த டுவிட்டை சுட்டிக்காட்டி கலாய்த்திருந்தார்.

மேலும் சிலர் பிக்ஸலில் போட்டோ எடுத்து பின் அதை ஐபோனில் பதிவு செய்திருக்கலாம் என்று அனுஷ்காவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இருப்பினும் அனுஷ்கா அந்த இந்த டுவீட்டை நீக்கிவிட்டு, பின்பு அதே போன்ற பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers